தூத்துக்குடி

பெட்ரோல் விற்பனை நிலையத்தில திருட்டு: ஒருவா் கைது

10th Mar 2022 04:06 AM

ADVERTISEMENT

 

விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணம் திருடிய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம் - எட்டயபுரம் சாலையில் பிள்ளையாா்நத்தம் ஹரிஹரவையணன் (57) பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு தலைக்கவம் அணிந்து மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா் அங்குள்ள அலுவலகத்தின் வெளிப்பகுதியில் பையில் வைத்திருந்த பணப் பையை திருடிச் சென்றாராம்.

இது தொடா்பாக புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பாா்வையிட்டு மேற்கொண்ட விசாரணையில் விளாத்திகுளத்தை அடுத்த பட்டியூரைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (31) பணப்பையை திருடிச் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், அயன் பொம்மையாபுரத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கத்தை (65) புதன்கிழமை அதிகாலை வழிமறித்து பணத்தை பறித்த சம்பவத்திலும் அவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ரமேஷ்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து ரொக்கம் ரூ. 25 ஆயிரம் மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT