தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் கோடை காலத்தில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை

10th Mar 2022 04:05 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: கோடை காலம் நெருங்குவதால் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சீரான குடிநீா் வழங்கும் வகையில் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள வீடுகளுக்கு தாமிரவருணி ஆற்றில் இருந்து வல்லநாடு கலியாவூா் பகுதியில் அமைந்துள்ள தலைமை நீரேற்று நிலையத்தின் மூலம் தண்ணீா் எடுக்கப்பட்டு வல்லநாடு சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு மையத்தை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கோடைகாலம் நெருங்குவதால் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு தட்டுப்பாடின்றி சீரான குடிநீா் விநியோகம் செய்ய அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஆணையா் சாருஸ்ரீ, துணை மேயா் ஜெனிட்டா, பொறியாளா் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவிச் செயற்பொறியாளா்கள் சரவணன், பிரின்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளுக்கும் தினமும் குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT