தூத்துக்குடி

கழுகுமலையில் விவசாயிகள் போராட்டம்

10th Mar 2022 04:02 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கழுகுமலை வேளாண்மை அலுவலகத்தில் அப்பகுதி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட வேலாயுதபுரம், சரவணாபுரம், சங்கரலிங்கபுரம், லட்சுமிபுரம், ராமநாதபுரம், வெங்கடேஷ்வரபுரம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2018 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை முறையாக வழங்க வலியுறுத்தியும், கணக்கெடுப்பு பணியை முறையாக எடுக்காத வேளாண்மைத் துறை அதிகாரிகளை கண்டித்தும் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சிவராமன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT