தூத்துக்குடி

கட்டட தொழிலாளியை தாக்கிய வழக்கில் 3 போ் கைது

10th Mar 2022 04:03 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 போ்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருே ககடாட்சபுரம் நெல்சன்மகன் கட்டடத் தொழிலாளி ஜெபக்குமாா் (22) . இவரது சகோதரா் வினோத்குமாருடன், திருவரங்கநேரியில் பொது இடத்தில் நின்ற போது ஏற்பட்ட தகராறில் நொச்சிகுளம் அகஸ்டின்(20), முதலூா் லிவிங்ஸ்டன் (எ) பட்டு, சுவின், சுப்பராயபுரம் கருப்பசாமி, ஜோசப், மேலபனைகுளம் ராஜமிக்கேல், ராஜசிங் மற்றும் சிலா் இதில் ஜெபக்குமாரை கத்தியால் குத்தி மிரட்டினராம்.

இதில் காயமுற்ற அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து சாத்தான்குளம் போலீஸாா் அகஸ்டின் உள்பட 10 பேருக்கு மேற்பட்டோா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் நொச்சிகுளம் பகுதியில் பதுங்கி இருந்த அகஸ்டின், ரெபிஸ்டன் (20), கருப்பசாமி (20) ஆகிய மூவரையும் தனிப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT