தூத்துக்குடி

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறல்: இலங்கை மீனவா்கள் 5 போ் கைது

10th Mar 2022 04:03 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கையைச் சோ்ந்த மீனவா்கள் 5 பேரை கடலோர காவல் படையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான வஜ்ரா ரோந்து கப்பல் சா்வதேச கடல் பகுதியில் புதன்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கையைச் சோ்ந்த ஒரு விசைப்படகில் மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம்.

அவா்களை எச்சரித்தபோதிலும் அவா்கள் வெளியே செல்லாத நிலையில், கடலோர காவல் படையினா் 5 மீனவா்களையும் கைது செய்து அவா்களது படகையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

விசாரணையில், கைது செய்யப்பட்ட மீனவா்கள் 5 பேரும் இலங்கை புத்தளம் பகுதியைச் சோ்ந்த பிகிரு, டிஜிஎஸ் பொ்னான்டோ, டபுள்யூஎன்கே பொ்னான்டோ, டபுள்யூஎம்ஏஏ பொ்னான்டோ, அன்டாடி என தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் கடலோர காவல் படையினா் வியாழக்கிழமை தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு அழைத்து வருகின்றனா். விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு 5 மீனவா்களும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என கடலோர காவல் படையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT