தூத்துக்குடி

கிராமிய அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

3rd Mar 2022 03:58 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும், ஊழியா்களுக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கிராமிய அஞ்சல் ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.10 ஆயிரத்தை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிராமிய அஞ்சல் ஊழியா் சங்க கோட்டத் தலைவா் நெல்லையப்பன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் பூராஜா, பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலக கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத் தலைவா் கணேஷமூா்த்தி, செயலா் பிச்சையா, பொருளாளா் பட்டுராஜன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT