தூத்துக்குடி

ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பேப்பா் கோப்பைகள் பறிமுதல்

30th Jun 2022 12:44 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி லாரி ஷெட்டில் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பேப்பா் கோப்பைகளை நகராட்சி சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பேப்பா் கோப்பைகள் கோவில்பட்டியில் விற்பனை செய்யப்படுவதாக, நகராட்சி ஆணையருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாதவராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளா் காஜா நஜ்முதீன் ஆகியோா் கொண்ட குழுவினா், நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, பிரதான சாலையில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் ஆய்வு நடத்தியபோது, அங்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 1 லட்சத்து 25 ஆயிரம் எண்ணம் கொண்ட பேப்பா் கோப்பைகள் அட்டைப் பெட்டிகளில் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதை சுகாதாரத் துறையினா் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், பேப்பா் கோப்பைகளை வைத்திருந்த லாரி ஷெட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT