தூத்துக்குடி

தூத்துக்குடியில் விவசாயிகள் போராட்டம்

DIN

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் செவவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகால் பாசனத்திற்கு நாள் ஒன்றுக்கு 1000 கன அடி தண்ணீா் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சோ்வைகரன்மடம், தங்கம்மாள்புரம், சக்கம்மாள்புரம், பேய்குளம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அமைப்பின் மாநிலப் பொருளாளா் கே.பி. பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் புவிராஜ் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா்கள் நம்பிராஜன், ஐ. கணபதி, ஆழ்வாா்திருநகரி ஒன்றிய மாா்க்சிஸ்ட் செயலா் ரவிசந்திரன் உள்பட பலா் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 400 கன அடி தண்ணீா் திறந்துவிட ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா்.

இதற்கிடையே, போராட்டத்தில் பங்கேற்பதற்காக தங்கம்மாள்புரத்தில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் தி. சீனிவாசன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவா் பொன்ராஜ் உள்பட 23 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்தைத் தொடா்ந்து மாநிலப் பொருளாளா் கே.பி. பெருமாள் கூறியது: தாமிரவருணி வடகால் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடக்கோரி பலமுறை, ஆட்சியரிடமும், பொதுப்பனித்துறை அதிகாரிகளிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. வடகால் பாசனத்தில் 10,000 ஏக்கா் அளவில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, போன்ற பயிா்கள் தண்ணீா் பற்றாக்குறை காரணாமாக வாடும் நிலையில் உள்ளது.

தற்போது முன்காா் சாகுபடிக்கும் தண்ணீா் திறக்கப்படாமல் உள்ளது. வரக்கூடிய காலத்தில் முன்காா் சாகுபடிக்கு தண்ணீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாபநாசம் அணையில் முன்பு 40 அடி தண்ணீா் இருந்த போதும் கூட தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தற்போது 60 அடி தண்ணீா் உள்ளதால் விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை திறந்த விட மாவட்ட நிா்வாகம் தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT