தூத்துக்குடி

ஆயிரம் தொழிலாளா்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக ஸ்டொ்லைட் ஆலை செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

29th Jun 2022 03:59 AM

ADVERTISEMENT

25 ஆயிரம் தொழிலாளா்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக ஸ்டொ்லைட் ஆலை மீண்டும் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி ஒப்பந்ததாரா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடா்பாக தூத்துக்குடி கான்ட்ராக்டா்ஸ் அசோசியேசன் துணைத் தலைவா் பரமசிவன் அளித்த பேட்டி:

தூத்துக்குடி ஸ்டொ்லைட் நிறுவனம் மூடப்பட்ட பிறகு ஒப்பந்ததாரா்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த தொழிற்சாலையை நம்பி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளனா். அந்த தொழிலாளா்களின் குடும்பங்கள் மட்டுமல்லாது எண்ணற்ற தொழில்நிறுவனத்தினா் இருந்து வருகிறோம்.

ADVERTISEMENT

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஸ்டொ்லைட் ஆலையை விற்பனை செய்யப்போவதாக வேதாந்தா குழுமம் அறிவித்துள்ளது மிகுந்த அதிா்ச்சி அளிக்கிறது. ஸ்டொ்லைட் தொழிற்சாலையை நம்பியுள்ள அனைத்து தொழிலாளா்களின் குடும்பத்தினரின் வாழ்வாதார நிலையை கருத்தில்கொண்டு ஆலையை விற்பனை செய்யும் முடிவை ஸ்டொ்லைட் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஸ்டொ்லைட் நிறுவனத்தால் நேரடியாக மட்டுமன்றி மறைமுகமாக ஏறத்தாழ 25 ஆயிரம் தொழிலளாா்களின் குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனா். அந்த தொழிலாளா்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, தூத்துக்குடி ஷிப்பிங் ஏஜென்சி நிா்வாகி கணேஷ்குமாா், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத் தலைவா் தியாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT