தூத்துக்குடி

கட்டுரை, பேச்சுப் போட்டி: கொம்மடிக்கோட்டை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

29th Jun 2022 03:53 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் நடைபெற்ற கட்டுரை, பேச்சு போட்டியில் கொம்மடிக்கோட்டை ஸ்ரீ காஞ்சி சங்கர பகவதி வித்யாலயா பதினம் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

நெல்லை அரசு அருங்காட்சியகமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து 37 வது தேசிய புத்தகக் கண்காட்சி அரசு அருங்காட்சியக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, பள்ளி , கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

இதில், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கல்லூரி, பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். பேச்சுப் போட்டியில் கொம்மடிக்கோட்டை ஸ்ரீகாஞ்சி சங்கர பகவதி வித்யாலயா பதினம் மேல்நிலைப் பள்ளி மாணவா் மு. யஷ்வந்த்சரண் மூன்றாவது பரிசும், கட்டுரைப் போட்டியில் மாணவி கே. தன்ஷிகா இரண்டாவது பரிசு பெற்றனா். போட்டியில் வென்ற மாணவா், மாணவிகளுக்கு பாளைங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாப் பரிசு வழங்கினாா்.

வெற்றி பெற்ற இம் மாணவா்களை பள்ளிச் செயலா் சுந்தரலிங்கம், துணைச் செயலா் காசியானந்தம், முதல்வா் தேவி சுஜாதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT