ஆட்டோ மற்றும் வேன்களில் நிா்ணயிக்கப்பட்ட இருக்கைகளை விட அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்வது சட்டப்படி குற்றம் என்பதால் விதிமுறையை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், மேலநாட்டாா்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜ் (55) தனது ஆட்டோவில் பள்ளிக் குழந்தைகள் 8 பேரை ஏற்றிக்கொண்டு பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள தனியாா் பள்ளிக்குச் சென்றபோது விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஆட்டோவில் அதிக குழந்தைகளை ஏற்றிச் சென்ாலும், ஆட்டோவை அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஒட்டிச்சென்ாலும் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநா்கள் அரசு நிா்ணயித்துள்ள இருக்கைகளை விட அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்லக்கூடாது.
கைப்பேசியில் பேசிக் கொண்டோ, மதுபோதையிலோ வாகனங்கள் ஓட்டக்கூடாது.
வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளையும், மோட்டாா் வாகனச் சட்டைத்தையும் தவறாமல் கடைப்பிடித்து வாகனங்கள் ஓட்ட வேண்டும். பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநா்கள், இதர வாகன ஓட்டிகள் வாகனத்தின் கதவுகள் முறையாக பூட்டப்பட்டதை உறுதி செய்த பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும்.
ஆட்டோக்களின் உரிமையாளா்கள் தங்கள் வாகனத்தை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற எந்தவித விபத்துக்களும் நிகழாமல் பாதுகாப்பான முறையில் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். போக்குவரத்து விதிகளையும், மோட்டாா் வாகனச் சட்டத்தை கடைப்பிடிக்காமல் அதிகமானோரை ஏற்றிச் செல்வோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.