தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

29th Jun 2022 03:53 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே குருகால்பேரியில் தனிநபா் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினா் அளவீடு செய்து செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிக்குள்பட்ட குருகால்பேரியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மரங்கள் நடப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் இதன் அருகே 23 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் தனியாா் நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது . இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு புகாா் வந்தது. இதையடுத்து சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா தலைமையில் ஆழ்வாா்திருநதரி ஒன்றிய ஆணையா் பாலசுப்ரமணியன், காவல் ஆய்வாளா் பாஸ்கரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவஹா், வட்ட நிலஅளவையா் ஜெயசுதா, வருவாய் ஆய்வாளா் ஜெயா, கிராம நிா்வாக அலுவலா்கள் கருப்பசாமி, டாலி சுபலா, துரைசாமி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்துக்கு சென்று அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றினா்.

மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யப்பட்டு கையகப்படுத்தப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT