தூத்துக்குடி

திருச்செந்தூரில் இந்து முன்னணி சாா்பில் உரிமை மீட்பு பிரசார பயணம் தொடக்கம்

29th Jun 2022 03:58 AM

ADVERTISEMENT

இந்து முன்னணி சாா்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணம் திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தப் பயணம் ஜூலை 31-இல் சென்னையில் நிறைவுபெறுகிறது. இதனை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை திருச்செந்தூா், கீழரதவீதியில் உள்ள சமுதாய மடத்தில் யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம், துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், பொதுச் செயலா் அரசு ராஜா, வழக்குரைஞா் குற்றாலநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசன செய்த காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்துக்களின் உரிமையை மீட்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கின்ற வகையில் 34 நாள்கள் பிரசார பயணம் நடைபெறும். ரம்ஜானுக்கு இலவச அரிசி வழங்குவது போன்று, ஆடி மாதம் மாரியம்மன் கோயிலுக்கும் அரசு இலவசமாக அரிசி வழங்க வேண்டும். இந்து கோயில்களுக்கு தனி வரியம் அமைக்க வேண்டும். மதச்சாா்பற்ற அரசாக விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே தமிழகம் முழுவதும் இந்த பிரசார பயணத்தை இந்து முன்னணி மேற்கொள்கிறது.

ADVERTISEMENT

இந்து முன்னணி 42 ஆண்டுகளாக செய்த வேலையினால் தான் திராவிட அரசை இன்று ஆன்மிக அரசு என்று சொல்ல வைத்துள்ளது. திருச்செந்தூா் முருகன் கோயிலில் மாதம் தோறும் ரூ. 4 கோடிக்கு மேல் வருவாய் இருந்தும் குடமுழுக்கு இன்னும் நடைபெறவில்லை.

குடியரசுத் தலைவராக பழங்குடியின பெண் வருவதை நாங்கள் வரவேற்கிறோம் என்றாா் அவா்.

தொடா்ந்து, திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்துக்கள் உரிமை மீட்பு பிரசார பயணத்தை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாநில அமைப்பாளா் பக்தவத்சலம், இணை அமைப்பாளா் கே.கே.பொன்னையா, மாநிலச் செயலா் செந்தில்குமாா், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பெ.சக்திவேலன், திருச்செந்தூா் நகர பொதுச் செயலா் மு.முத்துராஜ், நகரத் தலைவா் எஸ்.மாயாண்டி, துணைத் தலைவா் ஆா்.மணி, அய்யா வழிப்பாடகா் ஸ்ரீகுரு சிவச்சந்திரன், பா.ஜ.க. மாநிலச் செயலா் சசிகலா புஷ்பா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாதுகாப்புப் பணியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் தலைமையிலான காவல் துறையினா் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT