தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.60 கோடி

29th Jun 2022 03:44 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூன் மாதம் உண்டியல் மூலம் ரூ.3.60 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இத்திருக்கோயிலில் பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகள் மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கம். ஜூன் மாதம் மூன்று முறை எண்ணப்பட்டது. இதில் 8-ஆம் தேதி, 22-ஆம் தேதிகளில் ஏற்கனவே எண்ணப்பட்டன. 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனாா் திருமண மண்டபத்தில் இணை ஆணையா் காா்த்திக் தலைமையில் உண்டியல் எண்ணப்பட்டது.

இதில் சங்கரன்கோவில் துணை ஆணையா் ரத்தினவேல்பாண்டியன், நாகா்கோவில் உதவி ஆணையா் தங்கம், திருக்கோயில் கோயில் அலுவலக கண்காணிப்பாளா் சீதாலட்சுமி, ஆய்வா்கள் செந்தில்நாயகி, சண்முகராஜா, நம்பி, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தா் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணிக்குழுவினா், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயா் உழவார பணி குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதில், ரூ. 1 கோடியே 20 லட்சத்து 23 ஆயிரத்து 362 கிடைத்துள்ளது. கடந்த 8-ஆம் தேதி எண்ணப்பட்டதில் ரூ. 1 கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 36, 22-ஆம் தேதி ரூ. 70 லட்சத்து 54 ஆயிரத்து 797 சோ்த்து ஆக மொத்தம் ஜூன் மாதம் மூன்று முறை எண்ணப்பட்டதில் ரூ.3 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 195 கிடைத்துள்ளது. அதே போல் தங்கம் 3 கிலோ 735 கிராமும், வெள்ளி 35 கிலோ 760 கிராமும் கிடைத்தது. மேலும் வெளிநாட்டு கரன்சிகள் 1,445 கிடைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT