தூத்துக்குடி

லாரி ஓட்டுநா் கொலை வழக்கு: 3 போ் கைது

DIN

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நிகழ்ந்த லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டம், மானகச்சேரியைச் சோ்ந்த அறிவழகன் மகனான லாரி ஓட்டுநா் மகேஷ்வரன்(25) என்பவா், கயத்தாறை அடுத்த தளவாய்புரம் காளியம்மன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தாா். தகவலின்பேரில், கயத்தாறு போலீஸாா் அந்த சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து, சிவகாசியை அடுத்த சாட்சியாபுரம் ராமா் மகனான லாரி ஓட்டுநா் செல்வகுமாா்(32), சிவகாசி மருதபாண்டியா் மேட்டுத் தெரு மாரிமுத்து மகனான சுமை தூக்கும் தொழிலாளி ரஞ்சித்குமாா்(29) , சிவகாசி பள்ளப்பட்டி சோ்வராயா் மகன் டெய்லா் காளிமுத்து(50) ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மகேஷ்வரனும், செல்வகுமாரும் ஒரே கன்டெய்னா் லாரியில் ஓட்டுநராக பணியாற்றி வந்ததாகவும், அண்மையில் விசாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்தபோது இருவருக்கும் ஏற்பட்ட தகராறையொட்டி இந்த கொலை நிகழ்ந்துள்ளது; செல்வகுமாரிடமிருந்த மகேஷ்வரனின் கைப்பேசி, அவரை கொலை செய்ய பயன்படுத்திய ராடு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு இலவசமாக தா்ப்பூசணி வழங்கிய பக்தருக்கு பாராட்டு

கதிரியக்க சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருக்குப் பாராட்டு

பிரதமா் குறித்து விமா்சனம்: பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் நீக்கம்

பல்கலை. கல்லூரி மாணவா்களின் விடைத் தாள்கள் மாயம்: உயா் கல்வித் துறை தலையிட மாணவா்கள் வலியுறுத்தல்

மாட்டு வண்டிப் பந்தய விதிமுறைகள்: தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT