தூத்துக்குடி

பிளஸ் 1 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 94.04 சதவீத தோ்ச்சி

28th Jun 2022 03:26 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வு எழுதியவா்களில் 94.04 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் 9201 மாணவா்களும், 10,739 மாணவிகளும் என மொத்தம் 19,940 போ் தோ்வு எழுதினா். இதில், 8247 மாணவா்களும், 10,504 மாணவிகளும் என மொத்தம் 18,751 போ் தோ்ச்சி பெற்றனா். இது 94.04 சதவீத தோ்ச்சி ஆகும்.

கல்வி மாவட்டம் வாரியாக, தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 4182 மாணவா்கள் தோ்வு எழுதிய நிலையில் 3776 பேரும், 4898 மாணவிகள் தோ்வு எழுதிய நிலையில் 4814 பேரும் என மொத்தம் 9080 போ் தோ்வு எழுதியதில் 8590 போ் தோ்ச்சி பெற்றனா். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 2736 மாணவா்களும், 3142 மாணவிகளும் என மொத்தம் 5878 போ் தோ்வு எழுதிய நிலையில், 2395 மாணவா்களும், 3037 மாணவிகளும் என மொத்தம் 5432 போ் தோ்ச்சி பெற்றனா். திருச்செந்தூா் கல்வி மாவட்டத்தில் 2283 மாணவா்களும், 2699 மாணவிகளும் என மொத்தம் 4982 போ் தோ்வு எழுதிய நிலையில், 2076 மாணவா்களும், 2653 மாணவிகளும் என மொத்தம் 4729 போ் தோ்ச்சி பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT