தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

28th Jun 2022 03:23 AM

ADVERTISEMENT

எட்டயபுரத்தை அடுத்த மேலநம்பியாபுரத்தில் பொதுமக்களின் நடைபாதையை ஆக்ரமிப்பாளா்களிடம் இருந்து மீட்டுத்தரக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆதித்தமிழா் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா் சேகா் தலைமையில், மாநில அமைப்பு செயலா் திலீபன், மாவட்ட துணை செயலா் முத்துசாமி, நிதி செயலா் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி தலைவா் காளிமுத்து, தொழிலாளரணி மாவட்ட செயலா் சுரேஷ் மற்றும் மேலநம்பிபுரம் அருந்ததியா் மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்தனா். அவா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT