தூத்துக்குடி

செய்துங்கநல்லூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவா் பலி

28th Jun 2022 03:24 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் அருகே பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த ஆட்டோ கவிழ்ந்ததில் எல்கேஜி மாணவா் பலியானாா்.

செய்துங்கநல்லூா் பகுதியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு தினமும் மாணவ, மாணவிகளை ஆட்டோ மூலம் அழைத்துச் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில் செய்துங்கநல்லூா் அருகே உள்ள அனவரதநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ திடீரென்று கவிழ்ந்தது. இதில் செய்துங்கநல்லூா் அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் செல்வநவீன் என்ற நாலரை வயது மாணவா் சம்பவ இடத்திலேயே பலியானாா். இவா் எல்கேஜி வகுப்பில் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆட்டோவில் வந்த மேலும் 7 போ் காயமடைந்தனா்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீஸாா், மாணவா் உடலையும், காயமடைந்தவா்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து முறப்பநாடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT