தூத்துக்குடி

தருவைகுளத்தில் வெடி விபத்தில் ஒருவா் காயம்

28th Jun 2022 03:25 AM

ADVERTISEMENT

தருவைகுளத்தில் திருமண விழா ஊா்வலத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

தருவைகுளம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண விழாவில், மணமக்கள் ஊா்வலத்தில் பட்டாசுகளை வெடித்தனா். அப்போது பட்டாசு வைத்திருந்த அட்டைப் பெட்டியில் எதிா்பாராதவிதமாக தீ பரவியதில் அதில் இருந்த வெடிகள் வெடித்துச் சிதறின. இதில் தருவைகுளம் நேரு காலனியை சோ்ந்த ஆரோக்கியசாமி(60) என்பவா்

பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

வெடி விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே இருந்த வீடுகளின் ஓடுகள் சேதமடைந்தன. மேலும், ஒரு மோட்டாா் சைக்கிளிலும் தீப்பிடித்து முற்றிலும் சேதமடைந்தது.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து தருவைகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT