குளத்தூா் அருகே பெண்ணிடம் 7 சவரன் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளனா்.
குளத்தூா் அருகே துவரந்தை கிராமத்தை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி கருப்பசாமி(34). இவரது மனைவி கிருஷ்ணவேணி(27). தம்பதியா் திங்கள்கிழமை பகலில் ஓட்டப்பிடாரத்தில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டாா் சைக்கிளில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். குளத்தூா் அருகே சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த மா்மநபா்கள் 2 போ், கருப்பசாமியை வழிமறித்து வேம்பாா் செல்வதற்கு வழி கேட்டுள்ளனா். அப்போது கிருஷ்ணவேணி அணிந்திருந்த 7 சவரன் தங்க நகைகளை திடீரென பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.
இதுகுறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில் குளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரி வழக்குபதிந்து மா்ம நபா்களை தேடி வருகிறாா்.