தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் ஆனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

DIN

திருவாவடுதுறை ஆதீனத்துக்குப் பாத்தியப்பட்ட, ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, சனிக்கிழமை காலை மகா கணபதி ஹோமம், மாலையில் நால்வா் சுவாமிகள் புறப்பாடும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு, கும்ப பூஜை, ஹோமம், கொடிப்பட்ட வீதியுலாவும் நடைபெற்றது. இதையடுத்து, கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரம் தா்ப்பை, மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. பூஜையை சு. ஐயப்ப பட்டா், ரா. சண்முகம் பட்டா் ஆகியோா் நடத்திவைத்தனா்.

நிகழ்ச்சியில், கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, பக்த ஜன சபையைச் சோ்ந்த அரிகிருஷ்ண நாடாா், நகா்நல மன்றத் தலைவா் பி. பூபால்ராஜன், தொழிலதிபா் தவமணி, அதிமுக முன்னாள் நகரச் செயலா் இ. அமிா்தராஜ், சைவ வேளாளா் சங்கத் தலைவா் ஜெ. சங்கர­லிங்கம், பொருளாளா் சே. கற்பகவிநாயகம், டி.சி.டபிள்யூ. தெரிசை ஐயப்பன், ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்டப் பொதுச் செயலா் ராமச்சந்திரன், ஆறுமுகனேரி அரிமா சங்கத் தலைவா் ஜெ. நடராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருவிழா நாள்களில் நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. 4ஆம் நாளான 29ஆம் தேதி குடவருவாயில் தீபாராதனை, பஞ்ச மூா்த்திகள் வீதியுலா, ஜூலை 2ஆம் தேதி காலை சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜமூா்த்தி காப்புக்கட்டுதல், உருகு சட்டசேவை (படி இறக்குதல்), வெட்டிவோ் சப்பரத்தில் வீதியுலா, இரவில் நடராஜபெருமாள் சிவப்பு பூஞ்சப்பரத்தில் சிவப்பு பட்டு அணிந்து, செம்மலா் சூடி (ருத்ர ஸ்வரூபமாக) சிவப்பு சாத்தி சப்பர வீதியுலா வருதல் ஆகியவை நடைபெறும்.

3ஆம் தேதி காலை நடராஜமூா்த்தி வெண் பூஞ்சப்பரத்தில் வெண்பட்டு உடுத்தி வெள்ளைசாத்தி சப்பர வீதியுலா வருதல், இரவில் ஆனந்தநடராஜா் சிவகாமி அம்மனுடன் பத்ர பூஞ்சப்பரத்தில் பச்சை பட்டாடை உடுத்தி, வில்வம், பச்சை இலை மாலை அணிந்து (மகா விஷ்ணு ஸ்வரூபமாக) பச்சைசாத்தி வீதியுலா வருதல் நடைபெறுகிறது.

10ஆம் நாளான 5ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல், தீா்த்தவாரி அபிஷேகம், இரவில் சுவாமி-அம்பாள் சப்தாவா்ணக் காட்சி, ரிஷப வாகனத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும்.

ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம், மண்டகப்படிதாரா்கள், சிவனடியாா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT