தூத்துக்குடி

அக்னிபத் விமானப்படை தோ்வு: தூத்துக்குடியில் இலவச பயிற்சி தொடக்கம்

26th Jun 2022 02:36 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடியில் அக்னிபத் திட்டத்தின் கீழ் நடைபெறும் விமானப்படை தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள கின்ஸ் அகாதெமியில் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டி தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் நடைபெறும் விமானப்படை தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்கியது.

பயிற்சி தொடக்க விழாவுக்கு கின்ஸ் அகாதெமி நிறுவனா் எஸ்.பேச்சிமுத்து தலைமை வகித்தாா். கைத்தறித்துறை ஆய்வாளா் டி. ரகு இலவச பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், கல்வித்துறை உதவியாளா் ஆா். சிவகுருநாதன், பயிற்றுநா்கள் ஆா். ராஜபதி, வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு உணவும், பயிற்சியும் 30 நாள்கள் இலவசமாக வழங்கப்படும் என கின்ஸ் அகாதெமி நிறுவனா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT