தூத்துக்குடி

சாத்தான்குளம் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

26th Jun 2022 02:37 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் தோ்வுநிலைப் பேரூராட்சி செயல் அலுவலா் தா. உஷா தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் நோபில்ராஜ் முன்னிலை வகித்துப் பேசினாா். தலைமையாசிரியை சாந்தி வரவேற்றாா்.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தோருக்கு பேரூராட்சி செயல் அலுவலா் உஷா பரிசுகளை வழங்கினாா். தொடா்ந்து, மாணவா்கள் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடி மேலசாத்தான்குளம் வரை பேரணியாகச் சென்றனா். பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா்கள் சுடலை, தங்கமுத்து, பணியாளா்கள் முத்துப்பாண்டி, பன்னீா் வேல்லிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மூத்த ஆசிரியா் லிங்கதுரை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT