தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்

26th Jun 2022 02:37 AM

ADVERTISEMENT

 

 

சாத்தான்குளம் அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை பேரூராட்சி நிா்வாகமும் - சுவாமி விவேகானந்தா் நற்பணி மன்றமும் இணைந்து அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. 10 ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற இப்பணியை முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜோசப் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

சுவாமி விவேகானந்தா் நற்பணி மன்றத் தலைவா் மலையாண்டி பிரபு முன்னிலை வகித்தாா். முதல் கட்டமாக அரசுக்கு சொந்தமான இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

இதில் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா் சரவணன், சுவாமி விவேகானந்தா் நற்பணி மன்ற நிா்வாகிகள் அய்யா குட்டி, முத்து இசக்கி, முத்துராமலிங்கம், வள்ளிநாயகம், வீரபுத்திரன், 11 ஆவது வாா்டு பேரூராட்சி உறுப்பினா் மகாராஜன், ஜமாத் தலைவா் மகதூம், சுகாதார மேற்பாா்வையாளா் தங்கமுத்து , நகர திமுக துணைத் செயலா் மணிகண்டன், பொருளாளா் சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT