தூத்துக்குடி

இன்று எஸ்.ஐ. போட்டித் தோ்வு: 6,965 போ் எழுத வாய்ப்பு

25th Jun 2022 12:05 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூன் 25) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறும் நேரடி காவல் உதவி ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வை எழுத 6,965 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் இந்த தோ்வு தூத்துக்குடியில் பி.எம்.சி. மெட்ரிகுலேசன் பள்ளி, காரப்பேட்டை நாடாா் மெட்ரிக் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, புனித மரியன்னை மகளிா் கல்லூரி, புனித பிரான்ஸிஸ் சேவியா் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 7 மையங்களில் நடைபெறுகிறது.

இதற்கான பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தலைமையில், 2 கூடுதல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் காவல் துணை கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட 1000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இப்பணிக்காக காவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், எஸ்.பி. பங்கேற்று ஆலோசனை வழங்கினாா்.

வினாத்தாள்: இந்தத் தோ்வுக்கான வினாத்தாள்கள் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டன. அந்தப் பெட்டிகளை எஸ்.பி. பாா்வையிட்டது, காவல்துறை வளாக அறையில் அதிகாரிகள், ஆளினா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அந்த அறைக்கு ஒரு தலைமைக் காவலா் தலைமையில் 4 ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT