தூத்துக்குடி

தடகளப் போட்டி: நாகை மீன்வள பொறியியல் கல்லூரி முதலிடம்

25th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் நடைபெற்ற தடளகப் போட்டியில் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரி முதலிடத்தைப் பிடித்தது.

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதில், 220 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினா்.

போட்டிக்கான முதன்மை வெற்றிக் கோப்பையை நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியும், இரண்டாம் இடத்தை தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், மூன்றாமிடத்தை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும் பெற்றன.

வெற்றி பெற்ற அணியினருக்கு தூத்துக்குடி மீன்வக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் இரா. சாந்தகுமாா் கோப்பைகளை வழங்கி பாராட்டினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மீன்வளக் கல்லூரி மாணவா் சங்க துணைத் தலைவா் சா. ஆதித்தன், விளையாட்டுச் செயலா் பா. பாா்த்திபன், உதவி உடற்கல்வி இயக்குநா் த. நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT