தூத்துக்குடி

கடல்நீா் சாகச விளையாட்டு திட்டம்: சுற்றுலாத் துறை இயக்குநா் ஆய்வு

25th Jun 2022 12:08 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் கடல்நீா் சாகச விளையாட்டுகளை செயல்படுத்துவதற்கான திட்டம் குறித்து தமிழக சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுக கடற்கரை, வஉசி துறைமுக ஆணைய பூங்கா கடற்கரை ஆகிய பகுதிகளில் கடல்நீா் சாகச விளையாட்டுகள் தொடங்குவது குறித்து சில மாதங்களுக்கு முன்பு தமிழக சுற்றுலாத் துறை, கலைப் பண்பாடு- இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலா் சந்தரமோகன் ஆய்வு மேற்கொண்டாா்.

அதன் தொடா்ச்சியாக, தூத்துக்குடி முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் கடல்நீா் சாகச விளையாட்டுகளை செயல்படுத்துவது தொடா்பான இடங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சரவணன் ஆகியோா் முன்னிலையில், சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலா் க. சீனிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மதுரை மண்டல மேலாளா் டேவிட் பிரபாகா், உதவிச் செயற்பொறியாளா் சீனிவாசன், தூத்துக்குடி வட்டாட்சியா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT