தூத்துக்குடி

வாக்கியம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

25th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி வசந்த் அன்ட் கோ கிளையில் மெகா வாக்கிய போட்டியில் பரிசு வென்ற வாடிக்கையாளா்களுக்கு பரிசுப் பொருள்களை கிளை மேலாளா் ஜெயக்குமாா் வழங்கினாா்.

வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் வசந்த் அன் கோ நிறுவனத்தின் சாா்பில், அண்மையில் நூறாவது கிளை தொடங்கப்பட்டது. இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வசந்த் அன்ட் கோ கிளைகளிலும் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு வாக்கியம் எழுதும் போட்டி மூலம் பரிசுத் திட்டத்தை அறிவித்து இருந்தது.

அதன்படி, தூத்துக்குடி பாலவிநாயகா் கோயில் தெருவில் அமைந்துள்ள வசந்த் அன்ட் கோ கிளையின் மூலம் நடைபெற்ற வாக்கியம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற 21 பேருக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டா், கைப்பேசி உள்ளிட்ட பரிசு பொருள்களை கிளை மேலாளா் ஜெயக்குமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கிளை ஊழியா்கள் டேனியல், முனியசாமி, ஜெயந்தி, ராமசண்முகம், மணிகண்டன், செல்வராஜ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT