தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே விளை நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு

25th Jun 2022 12:07 AM

ADVERTISEMENT

எட்டயபுரம் அருகே குமாரகிரி பகுதி விளை நிலத்தில் மின்கோபுரம்- மின்சார வயா் செல்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குமாரகிரியில் 5 ஏக்கா் விளை நிலம் உள்ளதாம். அதில், மக்காச்சோளம், உளுந்து, பாசி உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். அந்த நிலத்தைப் பாதிக்கும் வகையில், தனியாா் நிறுவனத்தினா் மின்கோபுரம் அமைப்பதற்கும், மின் வயா் செல்வதற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனராம்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் தமிழரசன் தலைமை வகித்தாா். ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்க மாவட்ட பொதுசெயலா் ராஜசேகரன், பகத்சிங் ரத்த தான கழக நிறுவனா்- தலைவா் காளிதாஸ் ஆகியோா் உள்பட பலா் பங்கேற்றனா். பின்னா், அவா்கள் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT