தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் ஆனி உத்திரத் திருநாள் கால் நாட்டு

25th Jun 2022 12:05 AM

ADVERTISEMENT

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா கால் நட்டுதல் வியாழக்கிழமை நடைபெற்றது.

இத் திருக்கோயில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா ஜூன் 26 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அருள்மிகு கன்னிவிநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு பூஜைகள் செய்து முகூா்த்தக்கால் நடப்பட்டது. இரவில் திருக்கோயில் கைங்கா்ய குழுவினா் திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினா்.

கால் நாட்டு விழாவில், கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, பக்த ஜன சபையைச் சோ்ந்த எஸ்.அரிகிருஷ்ண நாடாா், சைவ சித்தாந்த சபையின் சே.கற்பகவிநாயகம், ரயில்வே நிலைய அபிவிருத்தி சக்க ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT