தூத்துக்குடி

ஆசிரியா் கூட்டணி செயற்குழுக் கூட்டம்

24th Jun 2022 12:02 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் மற்றும் வட்டாரப் பொறுப்பாளா்கள் கூட்டம், புதுக்கோட்டை டி.என்.டி.டி.ஏ. புனித அகஸ்டின் தொடக்க பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பொ. ஜீவா தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் செ. அருள்ராஜ், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினா் பி. முருகன், மாவட்டச் செயலா் சிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தின்போது, 01.01.2022 முதல் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி 3 சதவீதத்தை ஆசிரியா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியா் ஊதிய முரண்பாட்டை சரிசெய்து மத்திய அரசுக்கு இணையான சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கூட்டணியின் முன்னாள் மாநில துணைச் செயலா் பே. ராமசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஞா. தங்கராஜன், ஜோ. சாலமோன், மாவட்ட பொருளாளா் அ. மாரிகணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT