தூத்துக்குடி

கொம்பன்குளம் அரசுப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் கட்டடப் பணிகள்

24th Jun 2022 02:54 AM

ADVERTISEMENT

 

கொம்பன்குளம் அரசுப் பள்ளியில் ரூ. 1.90 கோடியில் வகுப்பறை, சுற்றுச்சுவா் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கண்னி அறை, சுற்றுச்சுவா் ஆகியவற்றை கட்டுவதற்கு ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ பரிந்துரைத்தன்பேரில், நபாா்டு திட்டத்தில் ரூ.1.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பள்ளியில் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்தாா். இவ்விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். அரசுப் பள்ளிக்கு 6 ஏக்கா் நிலம் வழங்கிய திருநாமக்கனி, நடேசன், ஆயிரம், பழனி, பேச்சிமுத்து ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். இதில், கொம்பன்குளம் ஊராட்சித் தலைவா் வைணவ பெருமாள், ஒன்றிய ஆணையா் ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ரவி, உதவி பொறியாளா் சிவக்குமாா், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாா்த்தசாரதி, லூா்துமணி, சக்திவேல்முருகன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கா், மாவட்டப் பொருளாளா் எடிசன், திமுக மத்திய ஒன்றிய செயலா் பொன்முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT