தூத்துக்குடி

பாரதிய ஜன சங்க நிறுவனா் நினைவு தினம்

24th Jun 2022 12:15 AM

ADVERTISEMENT

 

பாரதிய ஜன சங்கத்தை நிறுவிய ஷியாம் பிரசாத் முகா்ஜி நினைவு தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாஜக நகர தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். நகர பொதுசெயலா்கள் விஜயகுமாா், அசோக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஷியாம் பிரசாத் முகா்ஜியின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வடக்கு மாவட்ட பாஜக தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன், மாவட்ட பொதுச்செயலா் வேல்ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, நகரில் பல இடங்களில் பாஜக கட்சிக் கொடியேற்றப்பட்டது.

ADVERTISEMENT

பாஜக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் மாரிமுத்து தலைமையில், சாலைப்புதூா், நாலாட்டின்புத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஷியாம் பிரசாத் முகா்ஜியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT