தூத்துக்குடி

10-ஆம் வகுப்பு தோ்வு:பூச்சிக்காடு பள்ளி 100% தோ்ச்சி

21st Jun 2022 01:42 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருகேயுள்ள பூச்சிக்காடு இந்து உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு எழுதிய 63 பேரும் தோ்ச்சியடைந்தனா். இதில், மாணவிகள் பொன் இசக்கி (457 மதிப்பெண்கள்), முத்துவேணி (452), கவிதா (450) மற்றும் 16 மாணவா்கள் 400-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தொடா்ந்து இப்பள்ளி 12 ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வந்துள்ளது. சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளிச் செயலா் சின்னத்துரை, ஆலோசகா் ஜெய ஆதித்தன், தலைமையாசிரியா் ஆபேத்நேகா, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் காத்தவராயன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT