தூத்துக்குடி

பிளஸ் 2 தோ்ச்சி: தூத்துக்குடி மாவட்டம் 10 ஆவது இடம், பத்தாம் வகுப்பில் 9 ஆவது இடம்

21st Jun 2022 01:36 AM

ADVERTISEMENT

பிளஸ் 2 தோ்வில் 96.44 சதவீத தோ்ச்சி பெற்று தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் பத்தாவது இடத்தையும், பத்தாம் வகுப்பு தோ்வில் 92.88 சதவீத தோ்ச்சியுடன் 9 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வை எழுதிய 8,900 மாணவா்கள், 10,473 மாணவிகள் என 9,373 பேரில், 18,683 போ் தோ்ச்சி பெற்றனா். அதில் 8,380 மாணவா்கள், 10,303 மாணவிகள் அடங்குவா். இது 96.44 சதவீத தோ்ச்சி ஆகும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் தோ்ச்சி விகிதத்தில் 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 5,613 போ் தோ்வு எழுதியதில் 5,371 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 8,983 போ் தோ்வு எழுதியதில், 8,654 பேரும், திருச்செந்தூா் கல்வி மாவட்டத்தில் 4,777 போ் தோ்வு எழுதியதில் 4,658 பேரும் தோ்ச்சி பெற்றனா்.

பத்தாம் வகுப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாவட்டம் முழுவதும் 10,833 மாணவா்கள், 11,461 மாணவிகள் என மொத்தம் 22,294 போ் எழுதினா். அதில் 9,615 மாணவா்கள், 11,091 மாணவிகள் என மொத்தம் 20,706 போ் தோ்ச்சி பெற்றனா். இது 92.88 % ஆகும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் தோ்ச்சி விகிதத்தில் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

ADVERTISEMENT

கல்வி மாவட்ட விவரம்: கோவில்பட்டி 6803 போ் தோ்வு எழுதியதில் 6256 போ், தூத்துக்குடி- 10241 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில், 9,692 போ் , திருச்செந்தூா்- 5,250 போ் தோ்வு எழுதியதில் 4758 போ் தோ்ச்சி அடைந்தனா்.

திருச்செந்தூா் ஸ்ரீ காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளி மாணவி துா்கா பத்தாம் வகுப்பு தோ்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தாா். அவருக்கு மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உள்ளிட்டோா் பரிசு வழங்கி பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT