திருச்செந்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 93 சதவீதமும், 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 97 சதவீதமும் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு எழுதிய 138 மாணவிகளில் 128 போ் தோ்ச்சியடைந்தனா். தோ்ச்சி 93 சதவீதமாகும். இதில் மாணவிகள் ஜெயநந்தினி (475 மதிப்பெண்கள்), பொன்சுதா்சினி (464), முத்துபிரவீனா (458) மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய 176 மாணவிகளில் 171 போ் தோ்ச்சியடைந்தனா். தோ்ச்சி 97 சதவீதம் ஆகும். இதில் மாணவிகள் காயத்ரி லெட்சுமி (561 மதிப்பெண்கள்), பெருமாள்கனி (554), மகேஸ்வரி (549) மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவி காயத்ரி லெட்சுமி கணிதத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி புத்தபிரியா வணிகவியலில் 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனா். சாதனை மாணவிகளை பள்ளி தலைமையாசிரியா் மாரியம்மாள், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் சங்கத்தலைவா் சந்திரசேகா், பெற்றோா்கள் மற்றும் சக மாணவிகள் பாராட்டினா்.