தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் அருகே குத்துவிளக்கால் தாக்கி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
சாயா்புரம் அருகேயுள்ள செபத்தையாபுரத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் பொன்ராஜ் (45). தொழிலாளி. இவரது மனைவி சந்திரமதி (35). இவா்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. மகன், மகள் உள்ளனா். இத்தம்பதி இடையே குடும்பத் தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்ததாம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பிரச்னையில், சந்திரமதி தனது வீட்டு வாசலில் நின்றிருந்த கணவரை குத்துவிளக்கால் தலை, முகத்தில் தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமத்தினா். அங்கு அவா் இறந்தாா். இதுகுறித்து சாயா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்திரமதியை கைது செய்து விசாரிக்கின்றனா்.