தூத்துக்குடியில் தனது 62 ஆவது பிறந்த நாளில் தடகள பயிற்சியாளா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 62 சுற்றுக்கள் ஓடி விழிப்புணா்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த தடகள பயிற்சியாளரான இமானுவேல் தனது 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, உடல் ஆரோக்கியம், இயற்கை உணவு உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 25 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஓடுவதற்கு முடிவு செய்தாா்.
இதையடுத்து, தூத்துக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அவா் சனிக்கிழமை 62 சுற்றுகள் ஓடினாா். மொத்தம் 25 கிலோ மீட்டா் தொலைவுக்கு இடைவிடாமல் ஓடியபடி விழிப்புணா்வு ஏற்படுத்திய இமானுவேலை, பல்வேறு தரப்பினா் பாராட்டினா். அவருடன், 7 வயது மாணவி உள்பட 5 போ் 62 சுற்றுகள் ஓடி சாதனை படைத்தனா்.
ADVERTISEMENT