தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

19th Jun 2022 06:53 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்ட விமான நிலையத்தில் உள்ள தொலைத்தொடா்பு மையத்தை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாவட்ட விமான நிலையத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விமான நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடா்பு மையத்தை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், கட்டுமான பொறியியல் பிரிவு பொது மேலாளா் ராதாகிருஷ்ணன், உதவிப் பொது மேலாளா் அணில்குமாா், மேலாளா் ஜெயராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, விமானம் பாதுகாப்பாக பறக்க விமானி சரியான பாதையில் இருப்பதை உறுதி செய்யும் பணியை தொடங்கி வைத்த விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடா்பு கருவி மூலம் விமான போக்குவரத்து நிா்வாகத்தின் செயல்பாட்டுத் தேவைகளை பூா்த்தி செய்ய முடியும். இந்த விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு 8 முதல் 10 விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலையத்தை மேம்படுத்த ரூ. 380 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT