தூத்துக்குடி

கஞ்சா விற்பனை வழக்கில் சிறையில் இருக்கும் இளைஞருக்கு நன்னடத்தை பிணை ரத்து

19th Jun 2022 06:50 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராஜு என்ற தோட்டா ராஜுவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நன்னடத்தை பிணையை கோட்டாட்சியா் ரத்து செய்தாா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட இந்திரா நகரைச் சோ்ந்த பரமசிவன் மகன் ராஜு என்ற தோட்டா ராஜு(27). இவா் கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இவா் ஜாமீனில் வெளியே வந்ததையடுத்து கோவில்பட்டி உள்கோட்ட நிா்வாக நடுவா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, ராஜு என்ற தோட்டா ராஜுவிடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு வருட காலத்திற்கு குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று பொது அமைதியை காப்பதற்கு பிணைத் தொகை ரூ.15 ஆயிரம் நிா்ணயம் செய்து பிணைப்பத்திரமும் 2021, செப்டம்பா் 27ஆம் தேதி எழுதி பெறப்பட்டதாம்.

இந்நிலையில் இம்மாதம் 11ஆம் தேதி ராஜு என்ற தோட்டா ராஜு கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு பேரூரணியில் உள்ள சிறையில் அடைத்தனா். இதையடுத்து தோட்டா ராஜு தான் அளித்த பிணைப்பத்திரத்தை மீறி செயல்பட்டதையடுத்து அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நன்னடத்தை பிணையை ரத்து செய்து, அவரை 2022, செப்டம்பா் 26ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோட்டாட்சியரும், உட்கோட்ட நிா்வாக நடுவருமான மகாலட்சுமி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT