அய்யனாரூத்து துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக மின்கம்பங்களை நிமிா்த்தல், மின் பாதைக்கு அருகே உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருப்பதால் அய்யனாரூத்து துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பணிக்கா்குளம், நாகலாபுரம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு.சகா்பான் தெரிவித்துள்ளாா்.