சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையாா்புரம் அருள்மிகு பூா்ண புஷ்கலாம்பிகை சமேத ஸ்ரீபூனூல் அய்யனாா் கோயிலில் மகாகும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, 11ஆம்தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை 3 நாள்கள் விழா நடைபெற்றது. 3ஆம் நாளான திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது.
இதில் நெல்லை மண்டல இந்து முன்னணி செயலா் பெ. சக்திவேலன், மாவட்ட பாஜக துணைத் தலைவா் எஸ். செல்வராஜ், கோயில் தா்மகா்த்தா ஆதிலிங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.