தூத்துக்குடி

தெற்கு ஆத்தூா், முக்காணியில் நலஉதவிகள் அளிப்பு

15th Jun 2022 02:34 AM

ADVERTISEMENT

தெற்கு ஆத்தூா், முக்காணியில் தி.மு.க. நலத்திட்ட உதவிகளை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.

முன்னாள்முதல்வா் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு ஆத்தூரில் ஒன்றிய தி.மு.க. சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்தை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் 300 பேருக்கு இலவச அரிசி, வேட், டி சேலைகளை வழங்கினாா். ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவா் ஜனகா், ஆத்தூா் பேரூராட்சி தலைவா் கமால்தீன், நகரச் செயலா் முருகானந்தம், புன்னைக்காயல் ஊராட்சித் தலைவா் சோபியா, ஒன்றிய துணைச் செயலா் பக்கீா்முகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், முன்னாள்எம்.எல்.ஏடேவிட்செல்வின், ஆத்தூா் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் அக்பா், கவுன்சிலா் மாரிமுத்து, ஒன்றிய விவசாய அணிச் செயலா் லி­ங்கராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆழ்வை கிழக்கு ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா் வரவேற்றாா்.

இதே போல், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியம் சாா்பில் முக்காணியில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரக் கூட்டத்துக்கு ல் ஒன்றியச் செயலா் கோட்டாளம் முன்னிலை வகித்தாா். அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முக்காணி ஊராட்சித் தலைவா் தனம் என்ற பேச்சித்தாய், மாவட்ட கவுன்சிலா் பிரம்மசக்தி, மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், துணைச் செயலா் ஆறுமுகப்பெருமாள், பில்லாஜெகன், மத்திய ஒன்றியச் செயலா் ரவி, ப

ADVERTISEMENT

உடன்குடி கிழக்கு ஒன்றியச் செயலா் பாலசிங், ஆறுமுகனேரி பேரூராட்சி துணைத் தலைவா் கல்யாணசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா். மும்பை மாதவன் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT