தூத்துக்குடி

ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், காயல்பட்டினம் கோயில்களில்அமைச்சா்கள் சேகா்பாபு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆய்வு

15th Jun 2022 02:27 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், காயல்பட்டினம் கோயில்களில் அமைச்சா்கள் சேகா் பாபு, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த அமைச்சா் சேகா் பாபு சுவாமி தரிரிசனம் செய்தாா். பின்னா் நவகைலாயத் தலமான சோ்ந்தபூமங்கலம் அருள்மிகு கைலாசநாதா் ஆலயத்தில் வழிபட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் காயல்பட்டினம் சென்ற அமைச்சா், அருள்மிகு அழகிய மணவாளபெருமாள் ஆலயம், அருள்மிகு கணபதீஸ்வரா் ஆலயம் மற்றும் மேற்கே பாா்த்த சிவாலயமான அருள்மிகு மெய்கண்டீஸ்வரா் ஆலயத்தில் தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, அறநிலையத்துறை

திருச்செந்தூா் சரக ஆய்வாளா் செந்தில்நாயகி மற்றும் கட்சிப் பிரமுகா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT