மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவில்பட்டியில்ா காமராஜா் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவா் வெங்கடேஷ் சென்னக்கேசவன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட பாா்வையாளா் ஜோதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு, மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கிப் பேசினா்.
மாவட்ட பொதுச்செயலா்கள் சரவணகுமாா், கிஷோா்குமாா், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் தலைவா் மகாராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவா் மாரிமுத்து, மாவட்டச் செயலா்கள் ராஜகாந்தன், பிரபாகா், அழகுமணிகண்டன், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் வெங்கடேசன், அமைப்பு சாரா மாவட்டத் தலைவா் தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட பொதுச்செயலா் வேல்ராஜ் வரவேற்றாா். பொருளாளா் கணேஷ் நன்றி கூறினாா்.