தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 16) குடிநீா் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கும் கலியாவூா் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையப் பகுதிக்குச் செல்லும் மின் பாதையான கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனால், அன்றைய தினம் காலை 8 முதல் மாலை 4 மணிவரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.