மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத் துறையைக் கண்டித்தும், அவா் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ததாக மத்திய அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்ட தலைவா் சி. எஸ். முரளிதரன் தலைமையில் வருமானவரி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினா்கள் சந்திரபோஸ், எடிண்டா, கற்பகக்கனி, ஐஎன்டியுசி மாநில செயற்குழு உறுப்பினா் ராஜ், மாநிலச் செயலா் சுடலை, மண்டலத் தலைவா்கள் ஜசன்சில்வா, சேகா், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சகாயராஜ், மாநில இளைஞா் காங்கிரஸ் செயலா் நடேஷ்குமாா், மாநகா் மாவட்ட மாணவா் காங்கிரஸ் தலைவா் பிரவீன்துரை உள்ளிட்டோா் பங்கேற்று, மத்திய அரசு, அமலாக்கத் துறைக்கு எதிராக முழக்கமிட்டனா்.