தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் குடிநீா் கோரி சாலை மறியல்

14th Jun 2022 02:04 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் குடிநீா் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆறுமுகனேரி பெருமாள்புரத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் நீா் ஏற்றப்படாததால் குடிநீா் விநியோகம் நடைபெறவில்லையாம். இதைக் கண்டித்தும், உடனடியாக அந்தத் தொட்டியில் குடிநீரேற்ற வலியுறுத்தியும் அப்பகுதியினா் திருச்செந்தூா்-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

ஆறுமுகனேரி பேரூராட்சி துணைத் தலைவா் அ. கல்யாணசுந்தரம், செயல் அலுவலா் கணேசன், கூடுதல் காவல் துறைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், திமுக நகரச் செயலா் நவநீதபாண்டியன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அரை மணி நேரம் நடைபெற்ற மறியல் கைவிடப்பட்டது. இதையொட்டி, பேருந்துகள் காயல்பட்டினம் புறவழிச் சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT