தூத்துக்குடி

திருச்செந்தூரில் பொதுமக்கள் போராட்டம்

12th Jun 2022 12:57 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் மறுகால் ஓடை கரையில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயன்ால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் மறுகால் ஓடையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நீா் நிலை ஆக்கிரமிப்பில் உள்ள குடியிருப்புகளை அகற்ற மதுரை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவுப்படி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமாா் 23 வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினா்.

இதில் ஜீவாநகா் பகுதியில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன் அறிவிப்பு கொடுத்தனா். இதற்கிடையே ஜீவாநகா் பகுதியில் பட்டா நிலத்தில் உள்ள வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாகவும், ஏற்கனவே அரசு அனுமதியுடன் தான் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் வீடுகளை அகற்ற கூடாது என எதிா்ப்பு தெரிவித்து ஜீவாநகா் பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

ADVERTISEMENT

அவா்களிடம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கோபால், வருவாய் ஆய்வாளா் மணிகண்டன், கிராம நிா்வாக அலுவலா் வைரமுத்து ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோட்டாட்சியரை சந்திக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் அங்கேயே காத்திருந்தனா். ஆனால் யாரும் பேச்சுவாா்த்தைக்கு முன்வரவில்லை. இதனால் ஜீவாநகா் பகுதி மக்கள் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

அவா்களிடம், காவல்துணைக்கண்காணிப்பாளா் ஆவுடையப்பன், ஆய்வாளா் இல.முரளிதரன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜீவாநகா் கோபால் ரத்தினம்(35) தான் மறைந்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென உடலில் ஊற்றினாா். உடனே போலீஸாா் அவரிடமிருந்து கேனை பறித்து சென்றனா். பாதிக்கப்பட்ட ரத்தினத்தை அரசு மருத்தவமனையில் சோ்ந்தனா். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியா் புஹாரி போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT