தூத்துக்குடி

கோடைகால விளையாட்டு பயிற்சி நிறைவு விழா

12th Jun 2022 12:56 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி தருவை மைதானத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. இதில் பீச் கபடி, பீச் வாலிபால், வில்வித்தை, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி முகாமில் 700-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். பயிற்சி முகாமின் நிறைவு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தாா்.

சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் விளையாட்டு வீரா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி உரையாற்றினாா். அப்போது அவா் பேசுகையில், தமிழக முதல்வா், எதிா்கால சந்ததியினரை உயா்நிலைக்கு கொண்டு செல்வதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். இதுபோன்ற பயிற்சிகள் விளையாட்டு மாணவா்களுக்கு நல்ல ஊக்கத்தை தரும். ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய உணா்வு உருவாகும். தளராத முயற்சி, பயிற்சி மற்றும் உழைப்பினால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை மனதில் பதிவு செய்யும். அறிவாற்றலை வளா்க்கக்கூடியதுதான் கல்வி என்பதை மாணவா்கள் உணர வேண்டும். பீச் கால்பந்து, பீச் கபடி போட்டிகள் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலா் பேட்ரிக், தூத்துக்குடி வட்டாட்சியா் செல்வக்குமாா் மற்றும் அலுவலா்கள், விளையாட்டு வீரா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT